எழுதுகோலின் பயணம்
காதலன் மன எண்ணங்களையும் அன்புகளையும் வெளிப்படுத்துகிறது
காதலிக்கு மனக்குமுறல்களையும் கண்ணீரையும் அன்பையும் வெளிப்படுத்துகிறது
எழுத்தாளர்களுக்கு
மனதின் குரல்களை வெளிப்படுத்துகிறது
மாணவனுக்கு அவன்
வெற்றியை நிர்ணயம் செய்கிறது .
குழந்தைக்கு தாறுமாறாக
ஓவியம் வரைய உதவியாக இருக்கிறது
உயர் பதவியில் இருப்பவர்களுக்கு
ஓர் அங்கீகாரத்தை தருகிறது
தாய் மகனுக்கு எழுதும் மடல்
பந்தம் பாசம் பற்று உணர்ச்சிகள் உணர்வுகள்.!
எழுதுகோல் என்னவோ ஒன்றுதான்
வெவ்வேறு பரிமாணங்கள்
வெவ்வேறு பார்வைகள்
மனிதர்களின் பார்வையின் கோணங்கள் இதேபோன்று வெவ்வேறானவை.
-- சசிகலா, வாணியம்பாடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக