அழகான காலை நேரம். வானம் அழகு
என் மனமும் அழகு
இயற்கையின் படைப்பில் அனைத்துமே எனக்கு அழகாக தெரிகிறது
மனம் ஏங்குகிறது
ஒரு தேநீர் காக
-- சசிகலா, வாணியம்பாடி
அழகான காலை நேரம். வானம் அழகு
என் மனமும் அழகு
இயற்கையின் படைப்பில் அனைத்துமே எனக்கு அழகாக தெரிகிறது
மனம் ஏங்குகிறது
ஒரு தேநீர் காக
-- சசிகலா, வாணியம்பாடி
வானுயர் மரம்
அதில் அழகான கிளைகள் இலைகள் பூக்கள் இவை அனைத்தும் மெல்லிய நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது
ஓ மனிதர்கள் மட்டும்தான் நடனம் ஆட முடியுமா என்ன
நானும் காற்று அசைவதற்கு தகுந்தாற்போல் நடனம் ஆடுகிறேன்.
-- சசிகலா, வாணியம்பாடி
மலரே
உன்னைப்பறித்து,
காயப்படுத்த மனமில்லை...
என் சுருள்முடிச் சரிவில் செருகி
சுதந்திரமாய் சூடிக்கொண்டேன்!
கார்குழல் கிளைகளில் நீ மலர...
நானும் உனக்கான மரமாவேன்!
இனி, எப்போதும்
உதிராது
பூத்திருப்போம் இணைந்தே!
-- ஆர். தீபா, சென்னை
தேவனுக்காக...
விடுதலை...
-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்
இந்த கவிதையை எழுதியது ஒரு ஆறு வயது கவிதாயினி. சசிகலா மேடம் எழுதுவதைப் பார்த்து அவளும் ஆசைப்பட்டு சொல்லி, ஒரு கவிதையாக ஆக்கி இருக்கிறாள்.
ஜெ பத்து வயதில் ரத்னபாலாவில் கதை எழுதியதாக சொல்வார். இந்த குழந்தைக்கு இப்பொழுதே கவிதையில் ஆர்வம். எதிர்காலத்தில் சிறந்த கவிதாயினியாக வர வாழ்த்துவோம் தோழிகளே.
வைரக்கல் மச்சம்
இரண்டு பெண்கள் இருக்கிறார்கள்
அதில் ஒருத்திக்கு வைரக்கல் இருக்கிறது ஒருத்திக்கு மச்சம் இருக்கிறது
அதில் வைரக்கல் இருக்கிறவருக்கு பொறாமை அதிகம்
மச்சம் இருப்பவனுக்கு வெள்ளை மனசு
இதில் யார் அழகு என்று கூறுவீர்கள்
என்ன கேட்டால் இருவரும் அழகு தான்
இதில் யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் அந்த விழாவிற்கு
என்ன கேட்டால் மச்சம் உள்ளவர்களை தான்
யார் எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை
அவர்களுடைய குணம் தான் முக்கியம்
-- அ . மிஷிகா
உறுதியானவள்
கவிஞர்: ப்ரணவ்சக்தேவ்
மொழிபெயர்ப்பு: ஆர். தீபா, சென்னை
செம்பருத்தி
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...