பெண்களுக்கு
சுதந்திரம் கிடைத்துவிட்டது
என்று முழக்கம்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது
உண்மை என்னவோ
பெண் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
எத்தனையோ பெண்கள்
இன்னும் வீட்டில்
அடிமையாக இருக்கிறார்கள் .
வீட்டிலும், நாட்டிலும்
என்றைக்கு ஒரு பெண்
நடு ராத்திரியில்
தனியாக, அனைத்து அணிகலன்கள்
அணிந்து கொண்டு வருகிறாளோ
அன்றைக்கு மட்டுமே
பெண் சுதந்திரம்
உண்மையானதாக இருக்கும்
பாரதி கண்ட புதுமைப் பெண்.
--சசிகலா, வாணியம்பாடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக