யாவற்றிலும்...

அம்மா... 

இது உன் இறுதி நாள் ... 
உன் தீ அணைந்து விட்டது ...

கண் கொட்டாமல் உன்னையே 
பார்த்துக் கொண்டிருந்தேன் ... 
காற்றோடு கரைந்து போனாய் ...

கடலின் அலை 
என்னை வருடி சென்றது ... 
துளி உப்பின் பிசுபிசுப்பு ...
கரைக்கப்பட்ட அஸ்தியிலிருந்து
உன் இருப்பு...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்