.png)
அம்மாவின் கருவறை
இருட்டாகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது
பத்து மாதம் ஆனவுடன் வெளி உலகத்திற்கு வந்தேன்
இருட்டாகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது
பத்து மாதம் ஆனவுடன் வெளி உலகத்திற்கு வந்தேன்
எனக்கு பிரமிப்பாக இருந்தது
பலவிதமான சத்தங்கள்
நான் எப்படி இங்கே இருக்க போகிறேன்
என்ற வருத்தம் ஆரம்பத்தில் இருந்தது
போகப் போக பழகிக் கொண்டேன்
என் அம்மாவின் மடியில் நான் தவழ்ந்து இருக்கும் பொழுது
அவள் புடவையில் இருக்கும்
அந்தப் பால் வாடை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது
நான் கொஞ்சம் வளர்ந்தவுடன்
எனக்கு அவள் தேவதையாக தெரிந்தாள்
இந்த உலகத்தில் இருக்கும் அத்தனையும்
எனக்கு அறிமுகப்படுத்தினாள்
இதில் என்ன ஆச்சரியம் என்றால்
என் அம்மா சொல்லித்தான்
என்னுடைய அப்பாவின் முகமே எனக்கு தெரியும்
குழந்தையாக இருக்கும்போது
அவள் சொல்லும் ஒவ்வொன்றையும் நாம் நம்புகிறோம்
வளர வளர
அவள் சொல்வதெல்லாம் சரியாக இருக்குமோ
என்ற கேள்விக்குறி வருகிறது
ஏன் இந்த மாற்றம் ?
மனிதனுடைய மனம் மாறிக்கொண்டே இருக்கும் என்பது இதுதானோ ?
-- சசிகலா, வாணியம்பாடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக