கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கண்ணாடி

ஒவ்வொரு நிமிடமும் தேடினேன் 

என் வேதனைகளையும், கண்ணீரையும், 

பிரச்சனைகளையும், 

கேட்க யாரும் இல்லை என்று  

மனிதனிடம் சொன்னேன்.

ஒன்று பத்தானது, நூறு ஒன்றானது, 

கண்ணாடி முன் நின்றேன், 

நான் அழுதால் அது அழுதது 

நான் சிரித்தால் அது சிரித்தது.

-- சசிகலா, வாணியம்பாடி

புதிர்

 புதிர்

வாழ்க்கையில் உங்களை உண்மையாக புரிந்தவர்களுக்கு 

மட்டும் நீங்கள் ஒரு நல்ல திறந்த புத்தமாக இருந்தால் போதும் 

உங்களை புரியாதவர்களுக்கு 

நீங்கள் புதிராகவே இருந்து விட்டுப் போங்கள் 

ஏனென்றால் அனைவராலும் வாசிக்க முடியாது 

ஒரு சிலரால் மட்டுமே உணர முடியும்.

-- சசிகலா, வாணியம்பாடி

தனுர் வேதம்...

சொல்  என்கிறது அம்பு ...
செல் என்கிறது வில்... 
கொல் என்கிறது மனம்... 
உயிர் என்கிறது இலக்கு...

தப்பாத வில்லில் 
எழுகிறான்  தேவன் ....
மண்டியிட்டு மடிகிறது 
தேவ உயிர்...

தேவனைக் கொல்ல
தேவனை எழுப்பும் 
வேதமோ...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

நன்றி

 

தினம் தினம் நன்றி கூறுங்கள் உங்களுக்கும் 
இந்தப் பிரபஞ்சத்திற்கு, 
பஞ்சபூதங்களுக்கு
 
நாம் உண்ணும் உணவு   
அனைத்திற்கும் நன்றி கூறுங்கள் 

நன்றி என்ற வார்த்தைக்கு 
மிகப்பெரிய சக்தி உண்டு 
உங்களை இன்னும் மென்மேலும் உயர்த்தி விடும்.

-- சசிகலா, வாணியம்பாடி

வீடு பேறு



என் வண்ணங்கள் 
தீர்ந்து விட்டன... 
ஒளிர்ந்து அத்தனையும் 
பொன்னாகின...
அடியில் இருள் சூழ்ந்து 
ஒளிந்து கொண்டுள்ளது...

விளக்கின் சுடர் 
தன் நிழல் தோய்ந்து 
நடனம் கொண்டது...

பொன்னும் இருளும்... 
இருமை 
எனை துரத்துகிறது... 

ஒளிரும் பயணத்தில் 
நான் மட்டுமே
எஞ்சியிருக்கிறேன்...
-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

உயிரற்ற உடல்

உயிரோடு இருக்கும் போது கிடைக்காத அன்பு 

நாம் இறந்த பிறகு நமக்கு ஆள் உயர மாலையும், 

அழுகையும், ஆரவாரமும், 

பலவிதமான 

பழங்கள், பலகாரங்கள் 

யாருக்கு வேண்டும் இவை அனைத்தும் 

உயிரற்ற போட்டோவிற்கா பிரபஞ்சமே பதில் கூறு...

-- சசிகலா, வாணியம்பாடி

கடவுள்

கடவுள் சிலையை உருவாக்கியவன் மனிதன் 
முதல் கருங்கல்லை எடுத்து  செதுக்கினான்.

அந்தக் கல் "ஆ வலிக்கிறது," என்றது. 
அடுத்த கல்லை எடுத்து செதுக்கினான்.
செதுக்கிய கல், 
"என்னை எவ்வளவு வேண்டுமானாலும், 
காயப்படுத்துங்கள்," என்றது. 

வலிக்கிறது என்ற கல், 
முதல் படிக்கட்டாக 
சூரத் தேங்காய்,
அடியை வாங்கிக் கொண்டிருக்கிறது. 

தினமும் எவ்வளவு வலியும் 
தாங்கிக் கொண்டிருந்த கல், 
கருவறையில் சிலையாக நிற்கிறது.

மனிதன் உருவாக்கிய சிலைகள் இடத்தில், 
மனிதன் குறைகளை வைக்கிறான் 
அத்தனைக்கும் நம்பிக்கைதான் காரணம்.

-- சசிகலா, வாணியம்பாடி

மைதானம்

நான் அஞ்சாங்கல் விளையாடிக் கொண்டிருக்கிறேன்,  

அனைவரும் மறந்த ஒரு விளையாட்டு... 

என் தோழி வருவாள் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன் 

அவள் கடைசி வரையும் வரவே இல்லை...

-- சசிகலா, வாணியம்பாடி

மழை


வானம் மேகமூட்டமாக இருக்கிறது 

சற்று நேரத்திலேயே 

இடியுடன் மழை 

அந்த  மழையின் சாரலில் செடியின் இலைகளில் இரவு நேரம் மழைத்துளிகள் 

முத்து பவளம் போல

ஜொலித்துக் கொண்டிருந்தது

என்னை வா வா என்று அழைத்தது.

-- சசிகலா, வாணியம்பாடி

மௌனம்

சில பேரிடம் பேச முடியும் 
ஓரிரு இடங்களில்  பேசவும்  முடியாது, 
புரிய வைக்கவும் முடியாது. 

நம்மை யார் என்று புரிய வைப்பதற்காக 
ஒவ்வொரு நாளும் 
உன்னை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டாம்.

பெண்ணே, வாழ்க்கையின் அத்தனை போராட்டத்திற்கும் 
ஒரே ஒரு அற்புதமான தீர்வு 
மௌனம் மட்டுமே !

-- சசிகலா, வாணியம்பாடி

நாடக மேடை

 

ஒவ்வொரு மனிதனும் அவன் வாழ்க்கையில் நாடக பொம்மைகள் தான் 

வீட்டில் ஒரு பெண் தாயாகவும், கணவனுக்கு மனைவியாகவும் 

அவள் வெளியே செல்லும்போது மேல் அதிகாரியாகவும், 

சக வேலையாளாகவு,ம் 

வழியில் நடந்து செல்லும் போது ஒரு நடை பயணியாகவும் 

சினிமா பார்க்கும்போது ரசிகையாகவும் 

கோவிலுக்கு செல்லும்போது பக்தையாகவும் 

இந்த வாழ்க்கை என்னும் மேடையி இத்தனை கதாபாத்திரங்களில்

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...

-- சசிகலா, வாணியம்பாடி

மாற்றங்கள்

மாற்றங்கள் ஒவ்வொரு மனிதனிடமும் வர வேண்டும் 

நம்ம ஒவ்வொரு வருடமும் காலண்டரை மாற்றிக் கொண்டு இருக்கிறோம். 

ஒவ்வொரு நாளும் தேதியை கிழித்துக் கொண்டே இருக்கிறோம் 

மாற்றம்   காலண்டர் இல்லை

இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடம் தான்  

மாற்றங்கள் வரவேண்டும்

இப்போது  நம்மிடம் இருந்தே ஆரம்பிப்போம்...

-- சசிகலா, வாணியம்பாடி

பொம்மைக்காரி

காதலன் 

காதலியிடம் 

அவளை ஒரு பொம்மை என்று நினைத்து அவள் உருவத்தை வர்ணிக்கிறான் 

அவளும் அதை ரசிக்கிறாள் 

அவனும் அவளைப் புசிக்கிறான் 

கண்ணோடு கண்கள் 

உதடோடு உதடுகள் 

பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அவனை  சந்திக்கிறாள் 

அவன் தெரியாதது போல் அவளை கடந்து செல்கிறான் 

அவனுக்கு என்னை ஞாபகப்படுத்த வேண்டும் என்றால் 

திரும்பவும் நான்......

-- சசிகலா, வாணியம்பாடி

சிறகுகளின் சங்கீதம்

அழகான மசூதி 

பல வகையான பறவைகள் சத்தம் 

ஒரு புதுமையான இசை காதில் ஒலிக்கிறது 

ஒவ்வொரு சத்தமும் ஒவ்வொரு இசையை உருவாக்குகிறது 

மனிதன் இசையை கொடுக்க வேண்டும் என்றால் எத்தனை கருவிகள் வேண்டும் 

இசை வித்துவான்கள் இவர்களிடம் தான் கற்றுக் கொண்டார்களோ?

ஓ பறவைகளே நீங்கள் யாரிடம் இந்த இசையை கற்றுக் கொண்டீர்கள்?

உங்களுக்கு குரு யார் தான் என்று சொல்லுங்களேன்...

-- சசிகலா, வாணியம்பாடி.

அம்மா


அம்மாவின் கருவறை 
இருட்டாகவும் அழகாகவும் அமைதியாகவும் இருந்தது 
பத்து மாதம் ஆனவுடன் வெளி உலகத்திற்கு வந்தேன் 

எனக்கு பிரமிப்பாக இருந்தது 
பலவிதமான சத்தங்கள் 
நான் எப்படி இங்கே இருக்க போகிறேன் 
என்ற வருத்தம் ஆரம்பத்தில் இருந்தது 
போகப் போக பழகிக் கொண்டேன் 

என் அம்மாவின் மடியில் நான் தவழ்ந்து இருக்கும் பொழுது 
அவள் புடவையில்  இருக்கும் 
அந்தப் பால் வாடை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது 

நான் கொஞ்சம் வளர்ந்தவுடன் 
எனக்கு அவள் தேவதையாக தெரிந்தாள்
இந்த உலகத்தில் இருக்கும் அத்தனையும் 
எனக்கு அறிமுகப்படுத்தினாள் 

இதில் என்ன ஆச்சரியம் என்றால் 
என் அம்மா சொல்லித்தான் 
என்னுடைய அப்பாவின் முகமே எனக்கு தெரியும்  

குழந்தையாக இருக்கும்போது 
அவள் சொல்லும் ஒவ்வொன்றையும் நாம் நம்புகிறோம் 
வளர வளர 
அவள் சொல்வதெல்லாம்  சரியாக இருக்குமோ 
என்ற கேள்விக்குறி வருகிறது 

ஏன் இந்த மாற்றம் ? 
மனிதனுடைய மனம் மாறிக்கொண்டே இருக்கும்  என்பது இதுதானோ ?
-- சசிகலா, வாணியம்பாடி




வழிப்போக்கன்

 

அவனும் அவளும் 

அழகான இருட்டு அவர்களை சூழ்ந்து கொண்டது 

ஒருவர் ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தனர் 

வாலிப வயது ஒரு போராட்டம் 

காமம் மோகம் இன்பம் துன்பம் 

இவர்கள் அத்தனை பேரும் ஒரு வழிப்போக்கன் தான் 

ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினேன் 

இவர்கள் வழிப்போக்கன் என்று தெரியாமல்.

-- சசிகலா, வாணியம்பாடி


விதை

விதை போட்டவன் தூங்கினாலும் 

விதை தூங்குவதில்லை 

போராடி பூமி பிளந்து மேலே வருவதற்குள் எத்தனை போராட்டம் 

அவை மட்டுமே 

 செடியாகவோ மரமாகவோ கம்பீரமாக நிற்கிறது 

போராட தயாராக இல்லை என்ற  விதை யாருக்கும் தெரியாமல் மண்ணுக்குள்ளே புதைந்து விடுகிறது

-- சசிகலா, வாணியம்பாடி.

ஈசல்கள்

 

விடிந்தால் இறந்து விடுவோம் என்று தெரியும் 

தெரிந்தே எவ்வளவு போராட்டம்.

அந்த ஈசல்களுக்கு ஓர் இரவு மட்டுமே வாழ முடியும் என்று தெரிந்தும் 

எவ்வளவு மன தைரியம் அதற்கு !

மனிதனுக்கு ஏன் இவ்வளவு தைரியம் வருவதில்லை ?

ஓ மனிதா இந்த ஈசலிடம் கற்றுக் கொள் -

மன தைரியத்தையும் ,தன்னம்பிக்கையும்.

-- சசிகலா, வாணியம்பாடி

வானம்

எல்லை இல்லா வானம் மனிதர்களின் மனது போலவே பறந்து விரிந்து இருக்கிறது

வானத்தைத் தொட்டுக் கொண்டு விமானம் பறந்து கொண்டு இருந்தது 

எனக்கும் தொட்டுவிட வேண்டும் என்று ஆசை.

-- சசிகலா, வாணியம்பாடி

இயற்கை

இந்த உலகத்தில் 

பிர பிரபஞ்சம் 

அனைவருக்குமே 

அதனுடைய கடமைகளை 

தொடர்ந்து எந்த தட்டுப்பாடும் இல்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறது 

அதற்கு ஓய்வு என்பதே இல்லை 

அதனிடம் எந்தவிதமான எதிர்பார்ப்புகள் இல்லை 

மனிதர்களும் எந்த விதமான எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.

-- சசிகலா, வாணியம்பாடி

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்