அன்பின் நாய்கள்:
இரவில் ஒருவன் அழுதுகொண்டிருந்தான்,
"அல்லா! அல்லா"
உதடுகள் புகழ்பாடி இனிமையாயின,
ஒரு இழிந்தவன், "நான் உன் கூக்குரலை கேட்டேன், ஏதேனும் பதில் கிடைத்ததா?"
அதற்கு அந்த மனிதனிடம் எந்த பதிலுமில்லை.
வேண்டுதலை நிறுத்தி, குழப்பமான உறக்கத்தில் வீழ்ந்தானவன்.
தன் கனவில், செறிந்த பச்சைபசுவெளிக்குள் ஆன்மாவின் வழிகாட்டியான கிதிரை பார்த்தான்.
"ஏன் இறைபுகழ் பாடுவதை நிறுத்தினாய்?"
"எந்த பதிலும் கேட்கவில்லை"
"நீ வெளிப்படுத்திய ஏக்கமே உனக்கான பதில்மொழி"
துயரம் தெறிக்கும் உனது அழுகையே
உன்னை இழுத்துச்செல்லும் இணைவை நோக்கி.
உதவியை வேண்டும் உனது தூய துயரமே அந்த ரகசிய கோப்பை.
தன் தலைவனுக்காக ஏங்கும் அந்த நாயின் குரலை கேள்.
அதன் புலம்பும் குரலே, ஒன்றுதல்.
பெயரே தெரியாத அன்பின் நாய்கள் உண்டு.
அதில் ஒருவனாக, உன் வாழ்வை கொடுத்துவிடு.
-- ப்ரீத்தி, சென்னை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக