ஆத்ம தரிசனம்...
வாழ்க்கை இருண்டு விட்டது ...
உலகமும் இருட்டி விட்டது ...
துக்கத்தின் சுமை
இமையை மிதித்து மூடிவிட்டது ...
முற்றிருள் சூழ்ந்த அகம் ....
திக்குத் தெரியாத கருவெளியில்
திகைத்து நிற்கிறேன் ...
எங்கிருந்தோ ஒற்றை ஒளிப்புள்ளி
என் இருப்பை தொட்டெடுத்து
அதன் சுழல் மையத்தில் வீசியது ...
ஒளியின் குகையில்
நெடு...ம் பயணத்தை
இமைக்கனத்தில்
வழுக்கிச் செல்கிறேன் ...
என் துளி அதன் பிரவாகத்தில்
மின்னலென சொட்டியபோது
ஒளி மட்டுமேயான பெருவெளியில்
ஒளியாய் இருக்கிறேன் ...
-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக