மலரே

 மலரே

உன்னைப்பறித்து,

காயப்படுத்த மனமில்லை...

என் சுருள்முடிச் சரிவில் செருகி

சுதந்திரமாய் சூடிக்கொண்டேன்!

​கார்குழல் கிளைகளில் நீ மலர...

நானும் உனக்கான மரமாவேன்!

இனி, எப்போதும்

 உதிராது

பூத்திருப்போம் இணைந்தே!

-- ஆர். தீபா, சென்னை

தேவனுக்காக...

 தேவனுக்காக...


தகிக்கும் சூரியனை நோக்கி
பிஞ்சு கைகளை நீட்டிக்கொண்டு 
புன்னகித்து எழுகிறது 
தளிர்....

சுருண்டு பொசுங்கும் 
குழந்தைக்காக 
கண்ணீர் வடிக்கிறான் 
வருணன்...

பழுத்து 
வீழ்ந்து  
மடியும் 
சருகுகள்....

தன்னை 
தான் உண்டு 
விருட்சமாக 
எழுகிறான் தேவன்.

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

விடுதலை...

 விடுதலை...


துளி நிழலும் 
இங்கே 
நிரந்தரமல்ல...

தீ 
உன்னை 
சுட்டெரிப்பதற்குள்

முற்றும் ஒளி நிரப்பி  
எழுந்துவிடு...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

வைரக்கல் மச்சம்

இந்த கவிதையை எழுதியது ஒரு ஆறு வயது கவிதாயினி. சசிகலா மேடம் எழுதுவதைப் பார்த்து அவளும் ஆசைப்பட்டு சொல்லி, ஒரு கவிதையாக ஆக்கி இருக்கிறாள்.

ஜெ பத்து வயதில் ரத்னபாலாவில் கதை எழுதியதாக சொல்வார். இந்த குழந்தைக்கு இப்பொழுதே கவிதையில் ஆர்வம். எதிர்காலத்தில் சிறந்த கவிதாயினியாக வர வாழ்த்துவோம் தோழிகளே.

வைரக்கல் மச்சம்

இரண்டு பெண்கள் இருக்கிறார்கள் 

அதில் ஒருத்திக்கு வைரக்கல் இருக்கிறது ஒருத்திக்கு மச்சம் இருக்கிறது 

அதில் வைரக்கல் இருக்கிறவருக்கு பொறாமை அதிகம் 

மச்சம் இருப்பவனுக்கு வெள்ளை மனசு 

இதில் யார் அழகு என்று கூறுவீர்கள் 

என்ன கேட்டால் இருவரும் அழகு தான் 

இதில் யாரை நீங்கள் தேர்வு செய்வீர்கள் அந்த விழாவிற்கு 

என்ன கேட்டால் மச்சம் உள்ளவர்களை தான் 

யார் எப்படி இருக்கிறார்கள் என்பது முக்கியமில்லை 

அவர்களுடைய குணம் தான் முக்கியம் 

-- அ . மிஷிகா

உறுதியானவள்

 உறுதியானவள்

 கவிஞர்: ப்ரணவ்சக்தேவ்

மொழிபெயர்ப்பு: ஆர். தீபா, சென்னை

இது எப்படி இருக்கிறது என்றால்? 
பெண்ணே!
எதுவரை சிறுநீரின் முதல் சில துளிகள் உன்னுள் விழாமல் இருக்கிறதோ?அதுவரை,
நீ கன்னி. பரிசுத்தமானவள்!


அதன் மென்மையும்,
அதன் ஒளிமயமான கனவுகளும், 
அந்த இரவின் ரகசியங்களும் உனக்கு மட்டுமே தெரியும்.


மக்களதை அசிங்கமானது என்று சொல்லட்டும்.
ஆனால்,
நீ மட்டும் அதை எவ்வளவு நன்றாக, அழகாகப் பாதுகாக்கிறாய்!


அவ்வப்போது அது குறும்புத்தனம் செய்யத் தொடங்கினாலும்,
நீ  கடுஞ்சொல் சொல்வதில்லை.
நீ அதற்கு ஏற்ப உன்னை மாற்றிக் கொள்கிறாய்.


உனக்கு நன்றாகவே தெரியும்,
இந்தக் களங்கம் அனைத்தும் உனக்கானதே என. 


அவன் இதிலிருந்து சம்பந்தமற்றவனாகி,
ஒதுங்கி விடுகிறான்.


எங்கிருந்தோ வந்த அந்த அநாகரீக ஆணை 
சரியாகப் புரிந்து கொள்வது,
உனக்கு மிகவும் அவசியமாகிறது.
தேவையானதும் கூட!


இல்லையேல் உன் அடையாளமே ஆபத்தாகி விடும்.


அந்த வகையில் நீ உறுதியானவள்!
பக்குவமானவள்!

செம்பருத்தி

செம்பருத்தி 

நான் ஒற்றைச் செம்பருத்தி 
நான் எவ்வளவு நாட்கள் இந்த செடியில் இருப்பது 
யாருக்கும் என்னை தெரியவில்லையா 
என்னை யாராவது பறித்து செல்வீர்கள் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன் 
நான் மலர்ந்தேன் நிறைய நாட்களாக ஒத்தையாக இந்த செடியில் இருக்கிறேன் 
என் வேதனை உங்களுக்கு புரியவில்லையா 
நீங்கள் வரும் வரை நான் காத்திருப்பேன் இப்படிக்கு ஒத்தைச் செம்பருத்தி



-- சசிகலா, வாணியம்பாடி

அலைகள்

கடல் என்னவோ பழையவை அலைகள் ஒவ்வொரு நாளும் புதியவை 


கடல் அலைகள் ஒரு நிமிஷத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி அலைகள் அடித்து கொண்டிருக்கும் என்று தெரியாது 


மனிதனின் மனம் கடல் அலைகளை விட வேகமாக அவனுடைய எண்ண ஓட்டங்கள் இருக்கும் 


பெண்களின் மனங்களின் என்ன அலைகள் கடலை விட மிகவும் வேகமாக கண்ணீரும் கம்பளியும் ஆக மனம் என்னும்கடலில்


ஓயாமல்  அடித்துடித்துக் கொண்டிருக்கும் இந்த மனதில் எத்தனை கோடான கோடி அலைகள் அடித்துக் கொண்டே தான் இருக்கும் அவள் வாழும் வரை மனதின் அலைகள் ஓய்வதில்லை 


பெண்களின் நிலை இப்படித்தான் இன்னும் நிறைய பேருக்கு இருந்து கொண்டிருக்கிறது



-- சசிகலா, வாணியம்பாடி

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்