அகம் மலர...


மலரை தரிசித்தேன்... 
என்னுள்ளிருக்கும்  அதை  
இணை வைத்தேன் ...

முள்ளை முள்ளால் 
நோக்குகிறேன் ...
தீயை என்  தீயே 
வந்து தொடுகிறது ... 
அகத்திலிருந்து 
அத்தனையும் கொட்டி 
உலகை நிரப்பியாயிற்று ... 

இப்போது அகம் 
மலரைத்தான் நோக்குகிறது ... 
அதன் தேன் எப்போதும் இனிக்கிறது ...

--விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

மகிழ்ச்சி

 

மகிழ்ச்சி என்பது 

பொன், பொருள், ஆடை, ஆபரணங்கள் 

விலை உயர்ந்த பொருட்களை 

வாங்கி குவிப்பதில் அல்ல, 

நல்ல மனிதர்களை 

நம்முடன் வைத்துக் கொள்வதில் தான் 

மகிழ்ச்சி இருக்கிறது.

-- சசிகலா, வாணியம்பாடி

மௌனத்தின் குரல் ...


காகிதத்தில் 
அள்ளி விதைத்த 
என் சொற்கள்...

வாசித்துப் பார்த்ததில்
வரையப்பட்டிருந்தது 
அகம்... 

உன்னை நோக்கி எய்தினேன்... 
உன்னில் தைத்ததா...
முளைத்து எழுந்ததா... 

அது வீழும் எனில்...
இலக்கு என்னவாகும்...
அதை மட்டுமாவது
திருப்பி  அனுப்பி விடு...
என்னிடம் ...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

நினைவுகள்

 

சீற்றத்தை விட, 
நினைவுகள் மிகவும் மோசமானது 

சுனாமியோ, சூறாவளி காற்று வந்தால் 
ஒருமுறைதான் பேரிழப்பையும் 
பெரும் சீற்றத்தையும் விளைவிக்கும் 

ஆனால் நினைவுகள் 
ஒவ்வொரு நாளும் 
பேரிழப்பை நிகழ்த்திக் கொண்டிருக்கும்

-- சசிகலா, வாணியம்பாடி

தனித்த பயணம் ..


நட ...
நீயே நட...
உன் கால் கொண்டு நட...
உறுதியாய் நட...
உன் தூரத்தை கடக்க 
அதுவே வழி... 

நீ மகளாக...  
அன்னையாக
இருக்கலாம்...
பிறருக்கு நீ 
பெண்ணாக மட்டுமே 
இருக்கிறாய்...

ஆகவே நட ...
எல்லை தொட...
சிகரம் தொட...
வானம் தொட... 
நட ...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

புன்னகை

 

வாழ்க்கையில் நீங்கள் 
ஒவ்வொரு நாளும் 
புன்னகைத்துக் கொண்டே இருங்கள் 

மொபைல் போன்  
எப்படி ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கிறோமோ 
நமக்கு புன்னகை 
தினம் தினம் ரீசார்ஜ் ஆகும் 

உங்களிடம் இவ்வளவு நகைகள் இருக்கும்போது 
உங்களுக்கு எதற்கு தங்க நகைகள் 
புன்னகை ஒன்றே போதும்.
-- சசிகலா, வாணியம்பாடி

தனுர் வேதம்...

சொல்  என்கிறது அம்பு ...
செல் என்கிறது வில்... 
கொல் என்கிறது மனம்... 
உயிர் என்கிறது இலக்கு...

தப்பாத வில்லில் 
எழுகிறான்  தேவன் ....
மண்டியிட்டு மடிகிறது 
தேவ உயிர்...

தேவனைக் கொல்ல
தேவனை எழுப்பும் 
வேதமோ...

-- விஜயலக்ஷ்மி, வேதாரண்யம்

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்