போகிற போக்கில்
கடந்த காலத்தையும்,
எதிர்காலத்தையும்
நினைத்து வாழ்க்கையை இழப்பதை விட
நிகழ்காலத்தில் வாழ்ந்தால்
கொஞ்சம் ஆவது நிம்மதி கிடைக்கும்
வாழும் வரை நிம்மதியாக இருப்போம்.
-- சசிகலா, வாணியம்பாடி
போகிற போக்கில்
கடந்த காலத்தையும்,
எதிர்காலத்தையும்
நினைத்து வாழ்க்கையை இழப்பதை விட
நிகழ்காலத்தில் வாழ்ந்தால்
கொஞ்சம் ஆவது நிம்மதி கிடைக்கும்
வாழும் வரை நிம்மதியாக இருப்போம்.
-- சசிகலா, வாணியம்பாடி
கடிகாரம்
சின்ன முள், பெரிய முள்
எப்போதும்
சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது
எந்த விதமான எதிர்பார்ப்புகள் இல்லை
அதன் வேலையை
அது ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறது
கடமையை
ஒழுங்காக செய்வதற்கு
கடிகார முள் ஒரு எடுத்துக்காட்டு.
-- சசிகலா, வாணியம்பாடி
பழுத்த இலைகள்
மரத்திலிருந்து
உதிர்ந்து கொண்டே இருந்தது
குருத்து இலைகள்
அதை பார்த்துக் கொண்டிருந்தது
ஓ! ஒரு நாள்.
-- சசிகலா, வாணியம்பாடி
மகிழ்ச்சியின் உச்சகட்ட நிலையில் கண்கள் அழுகின்றன
துயரத்தில் உதடுகள் சிரிக்கின்றன
கோபம் மௌனம் ஆகிவிடும்
மனிதனின் நம்பிக்கை துரோகத்தில்
மனம், உணர்வுகள், எண்ணங்கள், கோபம்,
அனைத்தும் இறந்து போகிறது.
-- சசிகலா, வாணியம்பாடி
ஒவ்வொரு நிமிடமும் தேடினேன்
என் வேதனைகளையும், கண்ணீரையும்,
பிரச்சனைகளையும்,
கேட்க யாரும் இல்லை என்று
மனிதனிடம் சொன்னேன்.
ஒன்று பத்தானது, நூறு ஒன்றானது,
கண்ணாடி முன் நின்றேன்,
நான் அழுதால் அது அழுதது
நான் சிரித்தால் அது சிரித்தது.
-- சசிகலா, வாணியம்பாடி
புதிர்
வாழ்க்கையில் உங்களை உண்மையாக புரிந்தவர்களுக்கு
மட்டும் நீங்கள் ஒரு நல்ல திறந்த புத்தமாக இருந்தால் போதும்
உங்களை புரியாதவர்களுக்கு
நீங்கள் புதிராகவே இருந்து விட்டுப் போங்கள்
ஏனென்றால் அனைவராலும் வாசிக்க முடியாது
ஒரு சிலரால் மட்டுமே உணர முடியும்.
-- சசிகலா, வாணியம்பாடி
ஜெய் குருதேவ்.
மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை நீங்கள் முற்றிலுமாக கைவிட வேண்டும்.
இந்தப் பாதையில், நிச்சயமாக சந்தேகங்களும் சூழ்நிலைகளும் உங்களை எல்லாப் பக்கங்களிலிருந்தும் குத்தும்; அதனால் எந்த ஒரு தருணத்திலும் உங்களிடம் எந்த பலவீனமும் மிஞ்சாது. இல்லையென்றால், இங்கு வந்து, என்னுடன் அமர்ந்து, சிரித்துவிட்டுப் போவதில் எந்த அர்த்தமும் இல்லை.
நீங்கள் இங்கு வந்தால், ஒரு "வைரம்" போல மாற வேண்டும்.💎சக்திவாய்ந்தவராக!
--சசிகலா, வாணியம்பாடி
முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...