மரம்

மரம் கண்ணீர் விட்டு அழுகிறது 

என்னை ஒருபுறம் 

வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் 

மறுபுறம் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் 

நான் வளர்வதற்கு 

எவ்வளவு ஆண்டுகள் ஆகிறது 

என்னை ஒரே நிமிடத்தில் 

வெட்டி சாய்த்து விடுகிறீர்களே 

இது நியாயமா ? தர்மமா ?

நான் அந்த இடத்தில் இல்லாமல் 

மனிதன் தவிக்கிறான் 

நிழல் இல்லை என்று 

பறவைகள் கூக்குரலிட்டு 

அழுகிறது 

இனி நான் என்ன செய்வேன்?

என் விதிப்படி ஆகட்டும்

--சசிகலா, வாணியம்பாடி

சுதந்திரம்

பெண்களுக்கு 

சுதந்திரம் கிடைத்துவிட்டது 

என்று முழக்கம் 

ஒலித்துக் கொண்டே இருக்கிறது  

உண்மை என்னவோ 

பெண் சுதந்திரம் பறிக்கப்படுகிறது.

எத்தனையோ பெண்கள் 

இன்னும் வீட்டில் 

அடிமையாக இருக்கிறார்கள் .

வீட்டிலும், நாட்டிலும் 

என்றைக்கு ஒரு பெண்  

நடு ராத்திரியில் 

தனியாக, அனைத்து அணிகலன்கள் 

அணிந்து கொண்டு  வருகிறாளோ 

அன்றைக்கு மட்டுமே 

பெண் சுதந்திரம் 

உண்மையானதாக இருக்கும்

பாரதி கண்ட புதுமைப் பெண்.

--சசிகலா, வாணியம்பாடி

தாமரைப்பூ

எவ்வளவோ

சேரும் சகதியும் நிறைந்த 

குட்டையில் தான் 

அழகான தாமரை பூ மலர்கிறது. 

அதேபோல்,

இந்த உலகம் 

சேரும் சகதியமாக தான் இருக்கும்.

தாமரை மீது சேறு

எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ,

நாமும் இந்த உலகத்தில், அப்படி

தாமரை  போல் தனித்து இருக்க வேண்டும்.

--சசிகலா, வாணியம்பாடி

ரோஜா பூ

ஒரு ரோஜா செடியை கண்டேன் 

ஆயிரம் முட்களும் 

எண்ணிலா இலைகளும் 

அதில் ஒரு ரோஜா பூ 

கம்பீரமாக 

சிரித்துக் கொண்டே இருந்தது 

முட்கள் என்னை 

குத்தி விடும் என்று நான் நினைத்தால் 

மலர முடியாது 

வாழ்க்கையில் 

ஆயிரம் முட்களும் இருக்கத்தான் செய்யும்.

--சசிகலா, வாணியம்பாடி

நிகழ்காலம்

போகிற போக்கில்

கடந்த காலத்தையும்,

எதிர்காலத்தையும் 

நினைத்து வாழ்க்கையை இழப்பதை விட 

நிகழ்காலத்தில் வாழ்ந்தால்

கொஞ்சம் ஆவது நிம்மதி கிடைக்கும் 

வாழும் வரை நிம்மதியாக இருப்போம்.

-- சசிகலா, வாணியம்பாடி

கடிகாரம்

கடிகாரம் 

சின்ன முள், பெரிய முள் 

எப்போதும் 

சுற்றிக் கொண்டே தான் இருக்கிறது 

எந்த விதமான எதிர்பார்ப்புகள் இல்லை 

அதன் வேலையை 

அது ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறது 

கடமையை 

ஒழுங்காக செய்வதற்கு 

கடிகார முள் ஒரு எடுத்துக்காட்டு.

-- சசிகலா, வாணியம்பாடி

இலைகள்

 

பழுத்த இலைகள் 

மரத்திலிருந்து 

உதிர்ந்து கொண்டே இருந்தது 

குருத்து இலைகள் 

அதை பார்த்துக் கொண்டிருந்தது 

ஓ! ஒரு நாள். 

-- சசிகலா, வாணியம்பாடி

அணங்கின் மொழி

முது நாவல்

முது நாவல் எனக்கு பிடித்த சிறுகதைத் தொகுப்பு. புனைவு களியாட்டுக் கதைகள் நூறையும் தினம் ஒன்றாக வாசிக்கும் போது, எனக்கு பிடித்த கதைகளை பட்டியல...

தங்க விதைகள்