பிறழ்வு
சட்டத்தின் பார்வையில்... குற்றம்!
சமூகத்தின் பார்வையில்... பிதற்றல்!
மதங்களின் பார்வையில்... பாவம்!
அறத்தின் பார்வையில்... பிறழ்வு!
இயற்கையின் பார்வையில்... முரண்!
ஆகவே, தோழி அகன்று விடுவோம்....
நம்மிடையே இருப்பது
புகைமூட்டமோ
பனிப்படலமோ அல்ல
வெறுமொரு விலகல்...
கூர் வார்த்தைகளை ஏந்தி நிற்காத
வெறுமொரு மௌனம்....
ஒப்பந்தச் சிறையில்
உறவைப் பிணைக்காத
வெறுமொரு தேடல்...
அறுக்கவோ பிணைக்கவோ இயலாத
வெறுமொரு பந்தம்...
வெடித்து சிதறும் முன்
வெகுதூரம் சென்றுவிடும்
வெறுமொரு பயணம்...
எதிரெதிர் திசையில்
வெகுதூரம் கடந்தும்
ஒற்றைப் புள்ளியில் ஒருமித்த
வெறுமொரு உறவு....
அகமன வேட்கையைத் தவிர
ஏதொரு அனுகூலமுமற்ற
வெறுமொரு பிணைப்பு...
ஆகவே, தோழி அகன்று விடுவோம்....
ராபியத்
சென்னை

அற்புதம் ராபியத்.
பதிலளிநீக்குவெடித்து சிதறும் முன்
வெகுதூரம் சென்றுவிடும்
வெறுமொரு பயணம்...
வெற்றுமொரு பயணம். எத்தனை எத்தனை பயணங்கள் வெற்றுமொரு பயணம் ஆகிவிடுகிறது, திரும்பி பார்க்கையில்
நல்ல கவிதை ராபியத்... மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு